உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / அரையிறுதியில் சிம்ரன்ஜீத் கவுர் * உலக கோப்பை வில்வித்தையில்...

அரையிறுதியில் சிம்ரன்ஜீத் கவுர் * உலக கோப்பை வில்வித்தையில்...

ஷாங்காய்: உலக கோப்பை வில்வித்தையில் இந்தியாவின் சிம்ரன்ஜீத் கவுர், சாஹில் அரையிறுதிக்கு முன்னேறினர். சீனாவின் ஷாங்காய் நகரில் உலக கோப்பை வில்வித்தை 'ஸ்டேஜ் 2' நடக்கிறது. பெண்கள் தனிநபர் ரிகர்வ் போட்டிகள் நடந்தன. காலிறுதியில் இந்தியாவின் சிம்ரன்ஜீத் கவுர், 6-0 என, சீன தைபேவின் பாங் யு ஜுவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இந்தியாவின் தீபிகா குமாரி, நான்காவது சுற்றில் தென் கொரியாவின் காங் சயேயங்கிடம் 4-6 என போராடி தோல்வியடைந்தார். மற்றொரு வீராங்கனை கும்கும், 3-7 என, மெக்சிகோவின் வாலன்சியாவிடம் வீழ்ந்தார். ஆண்களுக்கான தனிநபர் காம்பவுண்டு போட்டியில் இந்தியாவின் சாஹில் ஜாதவ், காலிறுதியில் ஆஸ்திரியாவின் நிகோ வியனரை சந்தித்தார். இப்போட்டி 147-147 என சமன் ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த 'ஷூட் ஆப்பில்' 10-9 என அசத்திய சாஹில், அரையிறுதிக்கு முன்னேறினார். இந்தியாவின் குஷால் தலால், டென் மார்க்கின் மார்டின் மோதிய மற்றொரு காலிறுதி, 147-147 என சமனில் முடிந்தது. பின் நடந்த 'ஷூட் ஆப்பில்' குஷால் தலால் தோல்வியடைந்தார்.ஆதித்தி ஆறுதல்பெண்கள் காம்பவுண்டு பிரிவு நான்காவது சுற்றில் இந்தியாவின் ஆதித்தி, உலகின் 'நம்பர்-2' வீராங்கனை பிரிட்டனின் எல்லா கிப்சனை 150-147 என வீழ்த்தினார். காலிறுதியில் எஸ்தோனியாவின் ஜாட்மாவிடம், 'ஷூட் ஆப்பில்' வீழ்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை