உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / வில்வித்தை: சாஹில் வெண்கலம்

வில்வித்தை: சாஹில் வெண்கலம்

ஷாங்காய்: உலக கோப்பை வில்வித்தையில் இந்தியாவின் சாஹில், வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். சீனாவின் ஷாங்காய் நகரில் உலக கோப்பை வில்வித்தை 'ஸ்டேஜ் 2' நடக்கிறது. ஆண்களுக்கான தனிநபர் காம்பவுண்டு போட்டியில் இந்தியாவின் சாஹில் ஜாதவ் பங்கேற்கிறார். நேற்று நடந்த அரையிறுதியில் பிரான்சின் நிக்கோலஸ் கிரார்டை சந்தித்தார். இதில் சாஹில், 146-147 என தோல்வியடைந்தார்.அடுத்து நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சாஹில், டென்மார்க்கின் மார்டின் டாம்ஸ்போவுடன் மோதினர். இம்முறை சிறப்பாக செயல்பட்ட சாஹில், 147-144 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். காம்பவுண்டு ஆண்கள் அணிகளுக்கான பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் சாஹில், குஷால், ஓஜாஸ் இடம் பெற்ற அணி, சீனாவை எதிர்கொண்டது. இதில் 'ஷூட் ஆப்பில்' தோல்வியடைய, நான்காவது இடம் கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை