மேலும் செய்திகள்
ஆசிய கூடைப்பந்து: பிரதான சுற்றில் இந்தியா
27-Mar-2025
சிங்கப்பூர் சிட்டி: ஆசிய கோப்பை கூடைப்பந்து காலிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது.சிங்கப்பூரில், ஆசிய கோப்பை கூடைப்பந்து (3x3) தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 'பி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, சீனதைபே அணிகள் மோதின. இந்திய அணி 21-18 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு அரவிந்த் முத்து (9 புள்ளி), ஹர்ஷ் தாகர் (4), குஷால் சிங் (4), பிரனவ் பிரின்ஸ் (4) கைகொடுத்தனர்.மற்றொரு போட்டியில் சீனா, சீனதைபே அணிகள் மோதின. இதில் சீனா 21-10 என வெற்றி பெற்றது. கடைசி லீக் போட்டியில் இந்தியா, சீனா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 19-21 என தோல்வியடைந்தது. இந்திய அணிக்கு அரவிந்த் முத்து (10 புள்ளி), பிரனவ் பிரின்ஸ் (5), ஹர்ஷ் தாகர் (4) ஆறுதல் தந்தனர்.'பி' பிரிவில் 'டாப்-2' இடம் பிடித்த சீனா (42 புள்ளி), இந்தியா (40) அணிகள் காலிறுதிக்குள் நுழைந்தன. இந்திய அணி, 12 ஆண்டுகளுக்கு பின் காலிறுதிக்கு முன்னேறியது. கடைசியாக 2013ல் கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த தொடரில் காலிறுதி வரை சென்றிருந்தது.
27-Mar-2025