உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஆசிய கிராஸ் கன்ட்ரி: குல்வீர், சீமா தங்கம்

ஆசிய கிராஸ் கன்ட்ரி: குல்வீர், சீமா தங்கம்

ஹாங்காங்: ஆசிய 'கிராஸ் கன்ட்ரி' 10 கி.மீ., ஓட்டத்தில் இந்தியாவின் குல்வீர் சிங், சீமா தங்கம் வென்றனர்.ஹாங்காங்கில், ஆசிய 'கிராஸ் கன்ட்ரி' சாம்பியன்ஷிப் 17வது சீசன் நடந்தது. ஆண்களுக்கான தனிநபர் 10 கி.மீ., ஓட்டத்தில், இலக்கை 32 நிமிடம், 43 வினாடியில் அடைந்த இந்தியாவின் குல்வீர் சிங் தங்கத்தை தட்டிச் சென்றார். இத்தொடரின் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியரானார் குல்வீர். மற்ற இந்திய வீரர்களான அபிஷேக் பால் (32 நிமிடம், 49 வினாடி), அருண் ரத்தோடு (32 நிமிடம், 51 வினாடி) வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.பெண்களுக்கான தனிநபர் 10 கி.மீ., ஓட்டத்தில், இந்தியாவின் சீமா (37 நிமிடம், 20 வினாடி), சஞ்ஜீவனி ஜாதவ் (37 நிமிடம், 21 வினாடி) தங்கம், வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினர்.ஆண்கள் அணிகளுக்கான 10 கி.மீ., பிரிவில் குல்வீர் சிங், அபிஷேக் பால், அருண் ரத்தோடு, கார்த்திக் குமார் அடங்கிய இந்தியா, தங்கத்தை தட்டிச் சென்றது. பெண்கள் அணிகளுக்கான 10 கி.மீ., பிரிவில் சீமா, சஞ்ஜீவனி, அன்கிதா, சோனிகா அடங்கிய இந்தியா தங்கம் வென்றது.பின், 20 வயதுக்குப்பட்ட ஆண்கள் (8 கி.மீ.,), பெண்கள் (6 கி.மீ.,) அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு 2 தங்கம் கிடைத்தது. இத்தொடரில் இந்தியாவுக்கு 7 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என, 11 பதக்கம் கிடைத்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை