உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஆசிய குதிரையேற்றம்: இந்தியா வெள்ளி

ஆசிய குதிரையேற்றம்: இந்தியா வெள்ளி

பட்டாயா: ஆசிய குதிரையேற்றத்தில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.தாய்லாந்தின் பட்டாயா நகரில், ஆசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் நடக்கிறது. அணிகளுக்கு இடையிலான 'டிரஸ்சேஜ்' பிரிவில் கவுரப் பண்டிர் (66.059 புள்ளி, உ.பி.,), திவ்யகிருதி சிங் (67.118 புள்ளி, ராஜஸ்தான்), ஷ்ருதி வோரா (70.882 புள்ளி, மகாராஷ்டிரா) அடங்கிய இந்திய அணி பங்கேற்றது. இதில் 204.059 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்த இந்திய அணி வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியது.தாய்லாந்து அணிக்கு (205.853 புள்ளி) தங்கம் கிடைத்தது. வெண்கல பதக்கத்தை ஹாங்காங் (203.235) வென்றது. இதன்மூலம் ஆசிய விளையாட்டு (2022, தங்கம்), ஆசிய சாம்பியன்ஷிப் (2025, வெள்ளி) அரங்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய குதிரையேற்ற நட்சத்திரமானார் திவ்யகிருதி சிங்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ