உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஆசிய ஹாக்கி: சலிமா கேப்டன்

ஆசிய ஹாக்கி: சலிமா கேப்டன்

புதுடில்லி: இந்திய பெண்கள் ஹாக்கி அணி கேப்டனாக சலிமா நீடிக்கிறார்.சீனாவில், வரும் செப். 5-14ல் பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 11வது சீசன் நடக்கவுள்ளது. இதில் இந்திய அணி, 'பி' பிரிவில் தாய்லாந்து (செப். 5), ஜப்பான் (செப். 6), சிங்கப்பூர் (செப். 8) அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இத்தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக சலிமா டெட் தொடர்கிறார். அனுபவ வீராங்கனைகளான சவிதா, சுஷிலா சானுவுக்கு இடம் கிடைக்கவில்லை.இந்திய அணி: சலிமா (கேப்டன்), பன்சாரி சோலங்கி (கோல்கீப்பர்), பிச்சு தேவி (கோல்கீப்பர்), மணிஷா சவுகான், உதிதா, ஜோதி, சுமன் தேவி, நிக்கி பிரதான், இஷிகா சவுத்ரி, நேஹா, வைஷ்ணவி, ஷர்மிளா தேவி, லால்ரெம்சியாமி, சுனேலிதா, நவ்னீத் கவுர், ருதுஜா, பியூட்டி டங்டங், மும்தாஜ் கான், தீபிகா, சங்கீதா குமாரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி