உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / அய்ஹிகா-சுதிர்தா அசத்தல்: ஆசிய டேபிள் டென்னிசில்

அய்ஹிகா-சுதிர்தா அசத்தல்: ஆசிய டேபிள் டென்னிசில்

அஸ்தானா: ஆசிய டேபிள் டென்னிஸ் அரையிறுதிக்கு இந்தியாவின் அய்ஹிகா, சுதிர்தா ஜோடி முன்னேறியது.கஜகஸ்தானில், ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 27வது சீசன் நடக்கிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அய்ஹிகா, சுதிர்தா முகர்ஜி ஜோடி, தென் கொரியாவின் கிம் நயோங், லீ யூன்ஹை ஜோடியை எதிர்கொண்டது. இந்திய ஜோடி 3-1 (10-12, 11-7, 11-9, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இதன்மூலம் ஆசிய சாம்பியன்ஷிப் பெண்கள் இரட்டையர் பிரிவில் பதக்கத்தை உறுதி செய்த முதல் இந்திய ஜோடி என்ற வரலாறு படைத்தது. அரையிறுதியில் (அக். 13) இந்திய ஜோடி, ஜப்பானின் மிவா ஹரிமோடோ, மியூ கிஷாரா ஜோடியை எதிர்கொள்கிறது.மானவ் ஏமாற்றம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் மானவ் விகாஸ் தாக்கர், ஹாங்காங்கின் பால்ட்வின் சான் மோதினர். இதில் ஏமாற்றிய மானவ் தாக்கர் 0-3 (4-11, 4-11, 9-11) என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.மூன்றாவது சுற்றில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய் 0-3 என, தென் கொரியாவின் ஜோங்ஹூன் லிம்மிடம் வீழ்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை