உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / கூடைப்பந்து: 2 வீரர்கள் மரணம்

கூடைப்பந்து: 2 வீரர்கள் மரணம்

ரோடக்: ஹரியானாவை சேர்ந்த 16 வயது கூடைப்பந்து வீரர் ஹர்திக் ரதி. சப்-ஜூனியர், யூத் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.ஹரியானாவின் ரோடக் நகரில் உள்ள ஒரு மைதானத்தில், ஹர்திக் தனியாக பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது கூடைப்பந்து வளையத்தை எட்டி கையினால் தொட்டார். திடீரென போஸ்ட்' அடியோடு சாய்ந்து அவர் மீது விழுந்தது. அருகில் இருந்த சகவீரர்கள் உடனடியாக ஹர்திக்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஹர்திக் மரணமடைந்தார்.ஹரியானாவின் பகதுார்கர் மாவட்டத்தில் அமன் 15, என்ற கூடைப்பந்து வீரர் பயிற்சியில் ஈடுபட்டபோது இதுபோல கம்பம் விழுந்ததில் மரணமடைந்தார்.கடந்த இரு நாளில் இரு வீரர்கள் மரணம் அடைந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உயர் மட்ட அளவில் விசாரணை நடக்கும் என மாநில விளையாட்டு அமைச்சர் கவுரவ் கவுதம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ