டில்லியை வீழ்த்தியது பெங்கால்: ஹாக்கி இந்தியா லீக் போட்டியில்
ரூர்கேலா: ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் பெங்கால் அணி 4-1 என டில்லியை வீழ்த்தியது.ஒடிசாவின் ரூர்கேலாவில், ஹாக்கி இந்தியா லீக் 6வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் டில்லி, பெங்கால் அணிகள் மோதின. பெங்கால் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பெங்கால் அணிக்கு ஜக்ராஜ் சிங் (17, 38வது நிமிடம்), சுக்ஜீத் சிங் (1வது நிமிடம்), அபிஷேக் (47வது) கைகொடுத்தனர். டில்லி அணி சார்பில் கரேத் பர்லாங் (53வது நிமிடம்) ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார்.முதலிரண்டு போட்டியில் ஐதராபாத், கோனாசிகா அணிகளை வீழ்த்திய பெங்கால் அணி, 'ஹாட்ரிக்' வெற்றி பெற்று, 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. டில்லி அணி 3 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.மற்றொரு லீக் போட்டியில் ஐதராபாத், கோனாசிகா அணிகள் மோதின. இதில் கோனாசிகா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.