உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / பெங்கால் அணி சாம்பியன்: தமிழகம் 4வது இடம்: ஹாக்கி இந்தியா லீக் தொடரில்

பெங்கால் அணி சாம்பியன்: தமிழகம் 4வது இடம்: ஹாக்கி இந்தியா லீக் தொடரில்

ரூர்கேலா: ஹாக்கி இந்தியா லீக் தொடரில் தமிழக அணி 4வது இடம் பிடித்தது. பெங்கால் அணி கோப்பை வென்றது.ரூர்கேலா (ஒடிசா), ராஞ்சியில் (ஜார்க்கண்ட்) ஆண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் 6வது சீசன் நடந்தது. இதன் 3வது இடத்துக்கான போட்டியில், அரையிறுதியில் தோல்வியடைந்த தமிழகம், சூர்மா அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய தமிழக அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து 4வது இடம் பிடித்தது. சூர்மா அணி 3வது இடத்தை கைப்பற்றியது.தமிழகம் சார்பில் பிளேக் கோவர்ஸ் (15வது நிமிடம்), ஜிப் ஜான்சென் (59வது) தலா ஒரு கோல் அடித்தனர். சூர்மா அணிக்கு குர்ஜந்த் சிங் (12வது நிமிடம்), ஹர்ஜீத் சிங் (19வது), பிரப்ஜோத் சிங் (57வது) கைகொடுத்தனர்.

பெங்கால் அணி 'சாம்பியன்'

பைனலில் ஐதராபாத், பெங்கால் அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய பெங்கால் அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. பெங்கால் அணிக்கு ஜக்ராஜ் சிங் 'ஹாட்ரிக்' கோல் அடித்து கைகொடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை