உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / பி.எப்.ஐ., கோப்பை குத்துச்சண்டை: அருந்ததி தங்கம்

பி.எப்.ஐ., கோப்பை குத்துச்சண்டை: அருந்ததி தங்கம்

சென்னை: பி.எப்.ஐ., கோப்பை குத்துச்சண்டை தொடரில் அருந்ததி சவுத்ரி, அங்குஷிதா தங்கம் வென்றனர்.சென்னையில், இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு (பி.எப்.ஐ.,) கோப்பை முதல் சீசன் நடக்கிறது. நேற்று பெண்களுக்கான பைனல் நடந்தது. இதில் 65-70 கிலோ பிரிவு பைனலில் சர்வீசஸ் அணியின் அருந்ததி சவுத்ரி 5-0 என, அனைத்து இந்திய போலீஸ் (ஏ.ஐ.பி.) அணியின் ஸ்னேஹாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.பின், 60-65 கிலோ பிரிவு பைனலில், அசாம் வீராங்கனை அங்குஷிதா 3-2 என, ராஜஸ்தானின் பார்தவி கிரேவலை வீழ்த்தி தங்கத்தை தட்டிச் சென்றார்.அடுத்து நடந்த 57-60 கிலோ பிரிவு பைனலில் இந்திய விளையாட்டு ஆணையம் அணியின் பர்வீன் ஹூடா 3-2 என, ஹரியானாவின் பிரியாவை வீழ்த்தி தங்கம் கைப்பற்றினார். பின், 45-48 கிலோ பிரிவு பைனலில் உத்தரகாண்ட்டின் நிவேதிதா கார்கி 3-2 என ரயில்வே அணியின் மஞ்சு ராணியை தோற்கடித்து தங்கத்தை கைப்பற்றினார்.பின், 48-51 கிலோ பிரிவு பைனலில் ரயில்வே வீராங்கனை பாவனா சர்மா 5-0 என ரயில்வே அணியின் சவிதாவை வென்றார். மற்ற எடைப்பிரிவில் மகாராஷ்டிராவின் குஷி ஜாதவ் (51-54 கிலோ), இமாச்சல பிரதேசத்தின் வினாக் ஷி (54-57 கிலோ) தங்கம் வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை