உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / அமன் சிவாச் அபாரம் * ஆசிய யூத் குத்துச்சண்டையில்...

அமன் சிவாச் அபாரம் * ஆசிய யூத் குத்துச்சண்டையில்...

அம்மான்: ஆசிய யூத் குத்துச்சண்டை முதல் சுற்றில் இந்தியாவின் அமன் சிவாச் வெற்றி பெற்றார்.ஆசிய ஒலிம்பிக் கவுன்சில், ஆசிய குத்துச்சண்டை சங்கம் சார்பில், ஜோர்டானில் உள்ள அம்மானில் ஆசிய யூத் குத்துச்சண்டை (15 வயது, 17 வயதுக்குட்பட்ட) நடக்கிறது. ஆண்களுக்கான 63 கிலோ (17 வயது) பிரிவில் இந்தியாவின் அமன் அன்ஷுல், கஜகஸ்தான் வீரர் அபுபாகிரை எதிர் கொண்டார். இதில் சிறப்பாக செயல்பட்ட அமன், 4:1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். 70 கிலோ பிரிவில் இந்தியாவின் அன்ஷுல் ஹாசா, கஜகஸ்தானின் குயான்ஷ் மோதினர். போட்டியின் துவக்க சுற்றில் இருந்து பின்தங்கிய அன்ஷுல், 0:5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி