உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / செஸ்: விதித் அபாரம்

செஸ்: விதித் அபாரம்

புதுடில்லி: 'பிரீஸ்டைல்' செஸ் கிராண்ட்ஸ்லாம் தொடருக்கு இந்தியாவின் விதித் குஜ்ராத்தி தகுதி பெற்றார்.சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் 'பிரீஸ்டைல்' செஸ் கிராண்ட்ஸ்லாம் தொடர் நடத்தப்படுகிறது. பிப். 7 முதல் டிச. 13 வரை 6 தொடர்கள் நடக்கும். முடிவில் அதிக புள்ளி பெற்ற வீரர் சாம்பியன் ஆவார். இதன் இரண்டாவது தொடர் ஏப். 7-14ல் பாரிசில் நடக்கவுள்ளது. உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, ஐந்து முறை உலக சாம்பியன் ஆன நார்வேயின் கார்ல்சன் உட்பட 11 பேர் பங்கேற்கின்றனர். 12வது வீரரை தேர்வு செய்ய, ஆன்லைன் வழியாக போட்டி நடந்தது.இதன் 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் விதித் குஜ்ராத்தி, முன்னாள் உலக சாம்பியன் சீனாவின் டிங் லிரென் மோதினர். இதில் விதித் 1.5-05 என வென்றார். காலிறுதியில் இந்தியாவின் பிரனவ், அரையிறுதியில் ஈரானின் அமினை வீழ்த்தினார். பைனலில் விதித், ஹங்கேரியின் ரிச்சர்டு ராப்போர்ட் மோதினர். இதில் 1.5-05 என்ற கணக்கில் விதித் பெற்று முதலிடம் பிடித்தார். இவருக்கு ரூ. 8.7 லட்சம் பரிசு கிடைத்தது. தவிர, 'பிரீஸ்டைல்' செஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரில் பங்கேற்கவும் தகுதி பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை