மேலும் செய்திகள்
துவங்குகிறது 'குளோபல்' செஸ்
02-Oct-2024
லண்டன்: குளோபல் செஸ் லீக் தொடரில் ஆனந்த், அதிர்ச்சித் தோல்வியடைந்தார். சர்வதேச செஸ் கூட்டமைப்பு, இந்தியாவின் முன்னணி நிறுவனம் சார்பில் 'குளோபல் செஸ் லீக்' தொடர் (பரிசு ரூ. 4.20 கோடி) நடத்தப்படுகிறது. ஐ.பி.எல்., பாணியில் நடக்கும் இத்தொடரில் ஆறு அணிகள் பங்கேற்கின்றன. இந்திய ஜாம்பவான் ஆனந்தின் காங்கஸ் கிராண்ட்மாஸ்டர்ஸ், மும்பை மாஸ்டர்ஸ் அணிகள் நேற்று மோதின. ஆனந்த், மேக்சிம் வாசியரை (மும்பை) சந்தித்தார். ஆனந்த் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். துவக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆனந்த், அடுத்தடுத்து தவறு செய்தார். இதில் இருந்து மீள முடியாத ஆனந்த், 48 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். மும்பை வீராங்கனை ஹம்பி, வைஷாலியை (காங்கஸ்) வென்றார். விதித் குஜ்ராத்தி (மும்பை), அர்ஜுன் மோதிய போட்டி 68 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. முடிவில் ஆனந்தின் காங்கஸ் அணி 5-14 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. மற்றொரு போட்டியில் ஆகாஸ்கன் நைட்ஸ் அணி 14-2 என அமெரிக்கன் காம்பிட்ஸ் அணியை வீழ்த்தியது.
02-Oct-2024