உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / குகேஷிடம் வீழ்ந்தார் கார்ல்சன் * கிராண்ட் செஸ் தொடரில்...

குகேஷிடம் வீழ்ந்தார் கார்ல்சன் * கிராண்ட் செஸ் தொடரில்...

ஜாக்ரெப்: கிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசன் (மொத்தம் 5 தொடர்) தற்போது நடக்கிறது. இதன் மூன்றாவது தொடர் குரோஷியாவில் நடக்கிறது. உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். முதலில் 'ரேபிட்' முறையில் போட்டி நடக்கிறது. 4, 5வது சுற்றில் குகேஷ், உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக், அமெரிக்காவின் பேபியானோவை வென்றார். 6வது சுற்றில் குகேஷ், ஐந்து முறை உலக சாம்பியன் ஆன, உலகின் 'நம்பர்-1' வீரர், கார்ல்சனை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், துவக்கத்தில் பின் தங்கினார். 35வது நகர்த்தலில் கார்ல்சன் செய்த தவறை பயன்படுத்திய குகேஷ், ஆதிக்கம் செலுத்தினார். வேறு வழியில்லாத நிலையில் 49 நகர்த்தலில் கார்ல்சன் தோல்வியை ஒப்புக் கொண்டார். இத்தொடரில் குகேஷ் தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்தார். முன்னதாக நடந்த பிரக்ஞானந்தா-கார்ல்சன் மோதல், 74வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. முதல் 6 சுற்று முடிவில் குகேஷ் (10 புள்ளி) முதலிடத்தில் உள்ளார். போலந்தில் ஜான் டுடா (8), அமெரிக்காவின் வெஸ்லே (7.0), கார்ல்சன் (6.0) அடுத்த 3 இடத்தில் உள்ளனர். பிரக்ஞானந்தா (5.0) 7வது இடத்துக்கு முன்னேறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை