உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / செஸ்: அஸ்வத் சாம்பியன்

செஸ்: அஸ்வத் சாம்பியன்

கிரென்கே: கிரென்கே செஸ் தொடரில் இந்தியாவின் அஸ்வத் சாம்பியன் ஆனார்.ஜெர்மனியில் கிரென்கே செஸ் தொடர் நடந்தது. இதன் ஓபன் பிரிவில் 875 பேர் களமிறங்கினர். இந்தியா சார்பில் அஸ்வத், ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன் 9வது, கடைசி சுற்றில் இந்தியாவின் அஸ்வத், மங்கோலியாவின் முகமது முராடிலியை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அஸ்வத், துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தினார். முடிவில் 69 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதையடுத்து 9 சுற்று முடிவில் 8.0 புள்ளி பெற்ற 16 வயது வீரர் அஸ்வத் (6 வெற்றி, 2 'டிரா') முதலிடம் பிடித்து சாம்பியன் ஆனார். இவருக்கு ரூ. 17 லட்சம் பரிசு கிடைத்தது. அமெரிக்காவின் பிரண்டன் ஜாக்கப்சன் (8.0, 8 வெற்றி, 1 தோல்வி) இரண்டாவது, குரோஷியாவின் இவான் சரிக் (7.5) மூன்றாவது இடம் பிடித்தனர். கார்ல்சன் அபாரம்பிரீஸ்டைல் பிரிவில் நடந்த போட்டியில் ஐந்து முறை உலக சாம்பியன் ஆன நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் (9.0) சாம்பியன் ஆனார். ஈரானின் பர்ஹாம் (7.0), ரஷ்யாவின் ஆன்ட்ரி எசிபென்கோ (7.0) அடுத்த இரு இடம் பெற்றனர். இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி (7.0) ஐந்தாவது இடம் பிடித்தார். மற்ற இந்திய வீரர்கள் மெடோன்கா (6.5), பிரனேஷ் (6.5) 10, 11 வது இடம் பெற்றனர்.முதல் அந்தஸ்துசர்வதேச மாஸ்டரான தமிழகத்தின் அஸ்வத், கிரென்கே தொடரில் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து பெற்ற 3 வீரர்களை வீழ்த்தினார். இதையடுத்து, அஸ்வத் (ரேட்டிங் புள்ளி 2500) கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான முதல் அந்தஸ்தை எட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ