மேலும் செய்திகள்
அரையிறுதியில் கோகோ காப்
25-Mar-2026
காக்கிச் சட்டைக்குள் ஒரு 'கருணை'
03-Mar-2026
ஷிம்கென்ட்: கஜகஸ்தான் செஸ் தொடரில் இந்தியாவின் பிரனவ் சாம்பியன் ஆனார்.கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் சர்வதேச மாஸ்டர் செஸ் தொடர் நடந்தது. இந்தியாவின் பிரனவ் வெங்கடேஷ், செக் குடியரசின் அலெக்சி சரனா உட்பட 10 வீரர்கள் பங்கேற்றனர். 8 சுற்று முடிவில் 5 வெற்றி, 3 'டிரா' செய்து, 6.5 புள்ளியுடன் சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தார் பிரனவ்.9வது, கடைசி சுற்றில் பிரனவ், கஜகஸ்தானின் எர்காலி சுலைமானை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய பிரனவ், 28 நகர்த்தலில் வெற்றி பெற்றார்.9 சுற்றில் மொத்தம் 7.5 புள்ளியுடன் (6 வெற்றி, 3 'டிரா') முதலிடம் பிடித்த பிரனவ், சாம்பியன் கோப்பை தட்டிச் சென்றார். உஸ்பெகிஸ்தானின் ஷம்சித்தின் (6.0), ஹங்கேரியின் பெஞ்சமின் (5.0) அடுத்த இரு இடம் பெற்றனர்.
25-Mar-2026
03-Mar-2026