உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / செஸ் ஒலிம்பியாட்: இந்தியா இரண்டாவது வெற்றி

செஸ் ஒலிம்பியாட்: இந்தியா இரண்டாவது வெற்றி

புடாபெஸ்ட்: செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணிகள் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தன.ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் செஸ் ஒலிம்பியாட் தொடர் 45வது சீசன் நடக்கிறது. ஓபன் பிரிவில் 191, பெண்கள் பிரிவில் 180 அணிகள் பங்கேற்கின்றன.ஓபன் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்திய ஆண்கள் அணி, அயர்லாந்தை சந்தித்தது. முதல் சுற்றில் ஓய்வு எடுத்த இந்தியாவின் குகேஷ், இம்முறை விக்னிரை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய குகேஷ், முதலில் சற்று பின்தங்கினாலும், பின் 40 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். மற்ற போட்டிகளில் அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராத்தி, ஹரிகிருஷ்ணா வெற்றி பெற்றனர். இந்திய அணி 4.0-0 என்ற கணக்கில் இத்தொடரில் இரண்டாவது வெற்றி பெற்றது. 4 புள்ளியுடன் இந்திய ஆண்கள் அணி முதலிடத்தில் உள்ளது. பெண்கள் அபாரம்இந்திய பெண்கள் அணி இரண்டாவது சுற்றில், செக்குடியரசை எதிர்கொண்டது. இந்தியா சார்பில் களமிறங்கிய ஹரிகா, திவ்யா, வந்திதா என மூவரும் வெற்றி பெற்றனர். 'சீனியர்' வீராங்கனை தானியா, அயர்லாந்தின் மார்டினா மோதிய போட்டி 'டிரா' ஆனது. முடிவில் இந்திய பெண்கள் அணி 3.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 4 புள்ளியுடன் இந்தியா 33வது இடத்தில் உள்ளது. சபாஷ் செக் குடியரசு இரண்டாவது சுற்றுக்காக செக்குடியரசு வீராங்கனைகள் தயாராக இருந்தனர். ஆனால் பஸ் போக்குவரத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்திய வீராங்கனைகள் வருவதற்கு தாமதம் ஆனது. இருப்பினும், போட்டியை துவக்குமாறு, போட்டி அமைப்பாளர் செக் குடியரசு வீராங்கனைகளிடம் தெரிவித்தார். ஒருவேளை அவர்கள் 'ஸ்டாப் வாட்ச்சை' துவக்கி இருந்தால், அடுத்து வரும் இந்திய வீராங்கனைகள் வேகமாக விளையாட வேண்டிய நெருக்கடி ஏற்படும். இருப்பினும், விளையாட்டு உணர்வுடன் நடந்து கொண்ட செக்குடியரசு அணியினர், இந்திய வீராங்கனைகள் வரும் வரை காத்திருந்து, பிறகு போட்டியை துவக்கினர். இதற்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டு குவிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை