காலிறுதியில் திவ்யா * ஸ்பீடு செஸ் தொடரில்...
மும்பை: பெண்களுக்கான ஸ்பீடு செஸ் சாம்பியன்ஷிப், ஆன்லைனில் நடக்கிறது. காலிறுதிக்கு முந்தைய 'ரவுண்டு-16' சுற்றில் உலக கோப்பை தொடரின் சாம்பியன், இந்தியாவின் திவ்யா, உலகின் 'நம்பர்-3' வீராங்கனை, சீனாவின் லெய் டிங்ஜி மோதினர். மொத்தம் 13 போட்டிகள் நடந்தன.இருவரும் மோதிய முதல் போட்டி 'டிரா' ஆனது. அடுத்த 3 போட்டியில் தொடர்ந்து வெற்றி பெற்ற திவ்யா, 5வது போட்டியை 'டிரா' செய்தார். தொடர்ந்து நடந்த 6 முதல் 11 வரையிலான போட்டியில் திவ்யா 4 ல் வென்றார். 2 'டிரா' ஆனது. கடைசி இரு போட்டியில் இருவரும் தலா ஒரு வெற்றி பெற்றனர்.13 போட்டியில் திவ்யா 8 வெற்றி, 4 'டிரா', 1 ல் தோல்வியடைந்தார். டிங்ஜி 1 வெற்றி, 4ல் 'டிரா', 8 ல் தோல்வியடைந்தார். முடிவில் திவ்யா 10-3 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.இதில் உலகின் 'நம்பர்-1', சீனாவின் ேஹா இபானை நாளை சந்திக்க உள்ளார்.