உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / செஸ்: குகேஷ், வைஷாலி வெற்றி

செஸ்: குகேஷ், வைஷாலி வெற்றி

சமர்கந்த்: உஸ்பெகிஸ்தானில் 'கிராண்ட் சுவிஸ்' செஸ் தொடர் நேற்று துவங்கியது. இதில் 'டாப்-2' இடம் பெறும் வீரர், வீராங்கனைகள், 2026ல் நடக்கவுள்ள 'கேண்டிடேட்ஸ்' தொடரில் பங்கேற்க தகுதி பெறலாம்.இந்தியா சார்பில் உலக சாம்பியன் குகேஷ், உலக கோப்பை வென்ற திவ்யா, பிரக்ஞானந்தா உட்பட 10 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர். முதல் சுற்று போட்டிகள் நேற்று நடந்தன. குகேஷ், பிரான்சின் பாக்ராட்டை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், 45வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இந்தியாவின் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் ஜெப்ரி ஜியாங் மோதினர். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 31வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். மற்ற இந்திய வீரர்கள் விதித் குஜ்ராத்தி, ஹரிகிருஷ்ணா, நிஹால் சரின், பிரனவ் தங்களது முதல் சுற்று போட்டியை 'டிரா' செய்தனர். வைஷாலி அபாரம்பெண்கள் பிரிவில் இந்தியாவின் வைஷாலி, உஸ்பெகிஸ்தானின் குல்ருக்பெஹினை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய வைஷாலி, 56 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இந்தியாவின் ஹரிகா, இஸ்ரேலின் மார்ஷல் மோதிய போட்டி 'டிரா' ஆனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி