பிரக்ஞானந்தா ஹாட்ரிக் வெற்றி * நெதர்லாந்து செஸ் தொடரில்...
விஜ்க் ஆன் ஜீ: நெதர்லாந்து செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றார். நெதர்லாந்தில், 87 வது சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் குகேஷ், அர்ஜுன், பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் காருணா உள்ளிட்ட 14 பேர் பங்கேற்கின்றனர்.முதல் சுற்றில் 'டிரா' செய்த பிரக்ஞானந்தா, அடுத்த இரு சுற்றில் வெற்றி பெற்றார். நான்காவது சுற்றில் சக இந்திய வீரர் லியான் மெடோன்காவை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 46 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இது இவரது 'ஹாட்ரிக்' வெற்றி ஆனது. மற்றொரு 4வது சுற்றில் 'நடப்பு உலக சாம்பியன்' இந்தியாவின் குகேஷ், ரஷ்யாவின் அலெக்சி சரனா மோதினர். இப்போட்டி 70 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. இந்திய வீரர் ஹரிகிருஷ்ணா, நெதர்லாந்தின் வார்மெர்டாவை வீழ்த்தினார். இந்தியாவின் அர்ஜுன், ரஷ்யாவின் விளாடிமிரிடம் தோல்வியடைந்தார்.நான்கு சுற்று முடிவில் பிரக்ஞானந்தா, 3.5 புள்ளியுடன் முதலிடத்தில் தொடர்கிறார். உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் (3.0) 2வதாக உள்ளார்.சாலஞ்சர் பிரிவில் 4 சுற்று முடிவில் இந்தியாவின் வைஷாலி (2.5), 6வது, திவ்யா (1.5) 11வதாக உள்ளனர்.