உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / அர்ஜுன் இரண்டாவது இடம் * கிளாசிக் செஸ் தொடரில்

அர்ஜுன் இரண்டாவது இடம் * கிளாசிக் செஸ் தொடரில்

மால்மோ: 'டெபே சீஜ்மான்' கிளாசிக் செஸ் தொடரில் அர்ஜுன் இரண்டாவது இடம் பிடித்தார். சுவீடனின் மால்மோ நகரில், 'டெபே சீஜ்மான்' கிளாசிக் செஸ் தொடர் நடந்தது. 5 முறை உலக சாம்பியன் ஆன நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன், இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி உள்ளிட்ட 8 பேர் பங்கேற்றனர். ஆறு சுற்று முடிவில் அர்ஜுன் (4.5) முதலிடத்தில் இருந்தார். நேற்று 7வது, கடைசி சுற்று நடந்தன. அர்ஜுன், அமெரிக்காவின் ஆன்டி உட்வார்டை சந்தித்தார். இதில் அர்ஜுன் வென்றால், சாம்பியன் ஆகலாம் என்ற நிலையில், வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். எளிதாக வெல்வார் என நம்பப்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் தோல்வியின் விளிம்பில் இருந்தார். இதில் இருந்து மீண்ட அர்ஜுன், 60 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். மற்றொரு போட்டியில் கார்ல்சன், துருக்கியின் யாஜிசை வீழ்த்தினார். இதையடுத்து அர்ஜுன், கார்ல்சன் தலா 5.0 புள்ளியுடன் முதலிடம் பிடித்தனர். வெற்றியாளரை முடிவு செய்ய இரு போட்டி கொண்ட 'டை பிரேக்கர்' நடந்தது.முதல் போட்டியில் கார்ல்சன், அடுத்து அர்ஜுன் வெற்றி பெற, ஸ்கோர் 1.0-1.0 என ஆனது. பின் போட்டி 'சடன் டெத்' முறைக்கு சென்றது. இதில் வெற்றி பெற்றால் சாம்பியன் ஆகலாம் என்ற நிலையில், தோல்வியடைந்தர் அர்ஜுன் இரண்டாவது இடம் பெற்றார். கார்ல்சன் சாம்பியன் ஆனார். உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் அப்துசட்டோரோவ் 3வது இடம் பிடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை