உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / அர்ஜுன், வைஷாலி அபாரம் * உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பில்...

அர்ஜுன், வைஷாலி அபாரம் * உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பில்...

தோகா: உலக 'ரேபிட்' சாம்பியன்ஷிப்பில் முதல் மூன்று சுற்றில் இந்தியாவின் அர்ஜுன், வைஷாலி வெற்றி பெற்றனர்.கத்தார் தலைநகர் தோகாவில் உலக செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் உலக 'ரேபிட்', 'பிளிட்ஸ்' சாம்பியன்ஷிப் தொடர் நேற்று துவங்கியது. முதலில் 'ரேபிட்' சுற்றுக்கான போட்டிகள் நடக்கின்றன. ஓபன் பிரிவில் இந்தியா சார்பில் அர்ஜுன், பிரக்ஞானந்தா, அபிமன்யு, இனியன், பிரனேஷ், ஐந்து முறை உலக சாம்பியன் ஆன நார்வேயின் கார்ல்சன் உட்பட, மொத்தம் 247 பேர் பங்கேற்றுள்ளனர்.நேற்று நடந்த முதல் போட்டியில் பிரக்ஞானந்தா, ரஷ்யாவின் மக்சிமை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 52 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் அர்ஜுன், பிரான்சின் மார்கோ மடேரியாவை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய அர்ஜுன், 53 நகர்த்தலில் வென்றார். உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், கனடாவில் ரோட்ரிகு மோதிய போட்டி 'டிரா' ஆனது. மற்ற போட்டிகளில் இந்திய வீரர்கள் நிஹால் சரின், கார்த்திக் வெங்கடராமன், அரவிந்த் சிதம்பரம், பிரனவ் வெற்றி பெற்றனர்.முதல் 3 சுற்று முடிவில் 3 வெற்றி பெற்ற அர்ஜுன் (3.0), கார்ல்சன் (3.0) முதலிடத்தில் இருந்தனர். பெண்கள் பிரிவில் இந்தியாவின் ஹம்பி, ஹரிகா, சாவித்ரி உட்பட 141 பேர் பங்கேற்றுள்ளனர். உலக கோப்பை வென்ற இந்தியாவின் திவ்யா, சீனாவின் குயான்யுனை வென்றார். முதல் போட்டியில், இந்தியாவின் வைஷாலி, ரஷ்யாவின் அலியாக்சாண்ட்ராவை 43 வது நகர்த்தலில் சாய்த்தார். தொடர்ந்து அடுத்த இரு போட்டியிலும் வெற்றி பெற்றார். இந்தியாவின் பத்மினி, சீனாவின் லெய் டிங்ஜீயை வீழ்த்தினார். ஹம்பி, ரஷ்யாவின் இரெனை வென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை