உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / குத்துச்சண்டை: இந்தியா ஆதிக்கம்

குத்துச்சண்டை: இந்தியா ஆதிக்கம்

கிளாஸ்கோ: ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், காமன்வெல்த் விளையாட்டு 23வது சீசன் நடக்கிறது. குத்துச்சண்டையில் நேற்று காலிறுதி போட்டிகள் நடந்தன. பெண்களுக்கான 51 கிலோ பிரிவில் இந்தியாவின் சாக்சி சவுத்ரி, 5-0 என பிரீத்தி, வடக்கு அயர்லாந்தின் கெய்த்லினை சாய்த்து அரையிறுதிக்கு முன்னேறினார். * பெண்களுக்கான 70 கிலோ பிரிவில் இந்தியாவின் அருந்ததி, 3-1 என நியூசிலாந்தின் மார்கனை சாய்த்தார்.* பெண்களுக்கான 60 கிலோ பிரிவில் இந்தியாவின் பிரியா, 5-0 என ஸ்காலாந்தின் நியாமை சாய்த்து, அரையிறுதிக்குள் நுழைந்தார்.* ஆண்களுக்கான 60 கிலோ பிரிவில் இந்தியாவின் சச்சின், 5-0 என போஸ்ட்வானாவின் மொரேமியை வீழ்த்தினார். * 80 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அன்குஷ், 5-0 என செசல்ஸ் வீரர் ஜேடு மிகாக்கை வென்றார். * 90+ கிலோ பிரிவில் இந்திய வீரர் நரேந்தர், 3-2 என, சமோவாவின் செகோவை சாய்த்தார். * ஆண்களுக்கான 55 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஜடுமானி சிங், 5-0 என ஜாம்பியா வீரர் மவெங்கோவை சாய்த்து, அரையிறுதிக்கு முன்னேறினார். இதுவரை இந்தியாவின் 4 வீரர்கள், 5 வீராங்கனைகள் என 9 பேர் நாளை நடக்க உள்ள அரையிறுதிக்கு முன்னேறி, குறைந்தபட்சம் 9 பதக்கங்களை உறுதி செய்தனர். பைனலில் தஜிந்தர்பால் சிங் ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டி தகுதிச்சுற்று நடந்தது. குறைந்தது 20 மீ., துாரம் எறிந்தால் பைனலுக்கு செல்லலாம் என்ற நிலையில் இந்தியா சார்பில் களமிறங்கிய தஜிந்தர்பால் சிங், 20.14 மீ.,. துாரம் எறிந்தார். மற்றொரு இந்திய வீரர் சமர்தீப் கில், 19.95 மீ., துாரம் எறிந்தார். ஒட்டுமொத்தமாக 5வது இடம் பெற்றார். இதையடுத்து இருவரும் 12 பேர் கொண்ட பைனலுக்கு முன்னேறினர். அனிமேஷ் அசத்தல்ஆண்களுக்கான 200 மீ., ஓட்டம் தகுதிச்சுற்று நடந்தது. 16 பேர் அரையிறுதிக்கு செல்லலாம். இதில் 4வது பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் அனிமேஷ் குஜுர், 20.46 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித்தார். நடப்பு தொடரில் 100 மீ., ஓட்டத்தில் சாம்பியன் ஆன, காமரூன் வீரர் இமானுவேல் எஸீமை (20.73) இரண்டாவது இடத்துக்கு தள்ளினார் அனிமேஷ். ஒட்டுமொத்தமாக 7வது இடம் பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். எதிரிகளான நண்பர்கள்பொதுவாக ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் பிரிட்டனுக்காக (இங்கிலாந்து) களமிறங்குவர். காமன்வெல்த் என்றவுடன் தங்களது தேசத்திற்காக விளையாடுவர். இதுபோல வேல்சை சேர்ந்தவர் மாட் ரிச்சர்ட்ஸ் 23. வடக்கு அயர்லாந்து வீரர் ஜாக் மெக்மில்லன் 26. 2021 டோக்கியோ, 2024 பாரிஸ் ஒலிம்பிக், 4* 200 மீ., பிரிஸ்டைல் ரிலே நீச்சலில் தங்கம் வென்றனர். இம்முறை ஸ்காட்லாந்தில் நடந்த தகுதிச்சுற்று தனிநபர் பிரிவில், ஒருவருக்கு ஒருவர் சவால் தர, 4, 5வது இடம் பெற்று, பைனலுக்கு முன்னேறினர்.சாதிப்பாரா நீரஜ் சோப்ராகாமன்வெல்த் விளையாட்டில் இன்று ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று நடக்கின்றது. இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் இரு பதக்கம் (2021ல் தங்கம், 2024ல் வெள்ளி) வென்ற நீரஜ் சோப்ரா, யாஷ் விர் சிங் உட்பட மொத்தம் 18 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் சிறப்பாக செயல்பட்டு, இந்திய வீரர்கள் இருவரும் பைனலுக்கு முன்னேற காத்திருக்கின்றனர். உயரம் தாண்டுதல்: பூஜா 'ஷாக்'பெண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டி நடந்தது. மழை காரணமாக ஒரு மணி நேரம் தாமதம் ஆனது. இந்தியா சார்பில் பூஜா, அதிகபட்சம் 1.77 மீ., தாவினார். அடுத்து 1.82 மீ., உயரத்தை தாவ முடியாமல் ஏமாற்றினார். முடிவில் 8 வது இடம் பிடித்து வெளியேறினார். நிறைவு விழாவில் மனுஷி சில்லார்காமன்வெல்த் விளையாட்டு வரும் 2030 இந்தியாவின் ஆமதாபாத்தில் நடக்க உள்ளது. இதையடுத்து, ஆக. 2ல் நடக்கும் நிறைவு விழாவில் இந்தியாவின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் இடை, நடன நிகழ்ச்சிகள் நடைபெறும். அப்போது 'காமன்வெல்த் கொடி' இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். இதில் 'மிஸ் வேர்ல்டு' பட்டம் வென்ற, நடிகை மனுஷி சில்லார், இசை அமைப்பாளர் ஷங்கர் மகாதேவன், அவரது மகன்கள் சித்தார்த், ஷிவம் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.ஸ்ரீஹரி ஏமாற்றம்ஆண்களுக்கான நீச்சல் 200 மீ., பிரீஸ்டைல் போட்டி நடந்தது. இந்தியா சார்பில் பங்கேற்ற அனீஷ் (1:51.64 வினாடி) 18வது, சாஜன் பிரகாஷ் (1:51.99) 20வது இடங்களை பிடித்து, வெளியேறினர். * ஆண்கள் பாரா 50 மீ., போட்டியில் இந்தியாவின் சைதன்யா (32.77), சுயாஷ் (35.35) 4, 6வது இடம் பெற்று, பைனலுக்குள் நுழைந்தனர். * ஆண்கள் 100 மீ., பேக்ஸ்டிரோக் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் அரையிறுதிக்குள் நுழைந்தார். இதில் 55.52 வினாடி நேரத்தில் வந்து 6வது இடம் பெற்றார். ஒட்டுமொத்தமாக இவருக்கு 12 வது இடம் கிடைக்க, பைனல் ('டாப்-8') வாய்ப்பை இழந்தார். சறுக்கிய சஞ்சனா நேற்று பெண்களுக்கான 77 கிலோ எடை பிரிவில் பளுதுாக்குதல் போட்டி நடந்தது. இந்தியா சார்பில் சஞ்சனா களமிறங்கினார். முதலில் 'ஸ்னாட்ச்' பிரிவில் 94 கிலோ எடை துாக்க, 3 முறை முயற்சித்தும் தோல்வியடைய, ஏமாற்றத்துடன் வெளியேறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை