சைக்கிளிங்: இந்தியா தேசிய சாதனை
கொன்யா: டிராக் நேஷன்ஸ் கோப்பை சைக்கிளிங் போட்டியில் இந்திய ஆண்கள் அணி புதிய தேசிய சாதனை படைத்தது.துருக்கியின் கொன்யா நகரில் யு.சி.ஐ., டிராக் நேஷன்ஸ் கோப்பை சைக்கிளிங் தொடர் நடக்கிறது. முதல் நாளான நேற்று ஆண்கள் அணிகளுக்கான டீம் ஸ்பிரின்ட் பிரிவில் தகுதிச்சுற்று நடந்தது.இதில் 16 அணிகள் பங்கேற்றன. டேவிட் பெக்ஹாம், எசோவ் ஆல்பன், ரோஜித் சிங் இடம் பெற்ற இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி 44.187 வினாடி நேரத்தில் வந்து, 11வது இடம் பிடித்து, பைனல் வாய்ப்பை இழந்தது. நடப்பு சாம்பியன் நெதர்லாந்து அணி (43.302 வினாடி) கடைசி, 8வது இடம் பெற்று பைனலுக்கு முன்னேறியது. பிரிட்டன் (41.902), ஜப்பான் (42.229) 'டாப்-2' இடம் பிடித்தன.எனினும் இந்திய ஆண்கள் அணிக்கு இது புதிய தேசிய சாதனை (43.302) ஆனது. முன்னதாக இந்திய அணி, 44.451 வினாடி நேரத்தில் வந்து இருந்தது.