உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / சைப்ரஸ் செஸ்: ஹரிகா வெற்றி

சைப்ரஸ் செஸ்: ஹரிகா வெற்றி

நிகோசியா: சைப்ரஸ் செஸ் தொடரின் 4வது சுற்றில் இந்தியாவின் ஹரிகா வெற்றி பெற்றார்.சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் பெண்களுக்கான கிராண்ட் ப்ரி தொடர் நடக்கிறது. இதன் 4வது கட்ட போட்டிகள் சைப்ரசில் நடக்கின்றன. இந்தியாவின் ஹரிகா துரோணவள்ளி, திவ்யா தேஷ்முக் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர்.இதன் 4வது சுற்றில் இந்தியாவின் ஹரிகா, ஆஸ்திரியாவின் பெடெல்கா மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹரிகா, 27வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் திவ்யா, உக்ரைனின் அனா முஜிசுக் மோதினர். இதில் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய திவ்யா, 66வது நகர்த்தலில் தோல்வியடைந்தார்.நான்கு சுற்றுகளின் முடிவில் அனா முஜிசுக் (உக்ரைன்), ஜு ஜினர் (சீனா) தலா 3.0 புள்ளிகளுடன் முதலிரண்டு இடங்களில் உள்ளனர். அடுத்த இரு இடங்களில் அலெக்சாண்ட்ரா கோரியாச்கினா (ரஷ்யா), ஹரிகா தலா 2.5 புள்ளிகளுடன் உள்ளனர். திவ்யா, 1.5 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி