உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / டுப்ளான்டிஸ் உலக சாதனை: போல் வால்ட் போட்டியில்

டுப்ளான்டிஸ் உலக சாதனை: போல் வால்ட் போட்டியில்

சிலேசியா: டைமண்ட் லீக் தடகளத்தின் 'போல் வால்ட்' போட்டியில் சுவீடன் வீரர் டுப்ளான்டிஸ் மீண்டும் உலக சாதனை படைத்தார்.போலந்தில், டையமண்ட் லீக் தடகளம் நடந்தது. இதில் ஆண்களுக்கான 'போல் வால்ட்' போட்டியில் சுவீடனின் அர்மாண்ட் டுப்ளான்டிஸ் பங்கேற்றார். அதிகபட்சமாக 6.26 மீ., உயரம் தாவிய இவர், தனது சொந்த உலக சாதனையை முறியடித்தார். சமீபத்தில் முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் 6.25 மீ., உயரம் தாவிய இவர், உலக சாதனையுடன் தங்கம் வென்றார். தற்போது 10வது முறையாக உலக சாதனை படைத்துள்ளார்.3000 மீ., ஓட்டம்: ஆண்களுக்கான 3000 மீ., ஓட்டத்தில் நார்வேயின் ஜேக்கப் பங்கேற்றார். இலக்கை 7 நிமிடம், 17.55 வினாடியில் கடந்த இவர், உலக சாதனையுடன் முதலிடத்தை தட்டிச் சென்றார். இதற்கு முன், 1996ல் கென்யாவின் டேனியல் கோமன், பந்தய துாரத்தை 7 நிமிடம், 20.67 வினாடியில் கடந்தது உலக சாதனையாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை