எக்ஸ்டிராஸ்
* எகிப்தில் நடக்கும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் 10 மீ., ‘ஏர் ரைபிள்’ தகுதிச் சுற்றில், இந்திய வீரர்களான அர்ஜுன் பாபுதா (630.0 புள்ளி), ஸ்ரீகாந்த் தனுஷ் (629.4), பார்த் மகிஜா (629.3) முறையே 16, 21, 22வது இடம் பிடித்தனர். பெங்களூருவில் வரும்: 25ல், பெண்களுக்கான கூடைப்பந்து லீக் ஆசியா தொடர் நடக்கவுள்ளது. இதில் இந்தியா, ஜப்பான், தென் கொரியா, சீனதைபே, பிலிப்பைன்ஸ், சீனாவை சேர்ந்த 6 கிளப் அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா சார்பில் நடப்பு தேசிய சாம்பியன் ரயில்வே அணி களமிறங்குகிறது. * உ.பி.,யின் ஜான்சியில் நடந்த சீனியர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் கேரளா, சத்தீஸ்கர் அணிகள் மோதின. இப்போட்டி 2–2 என, ‘டிரா’ ஆனது. ஜார்க்கண்ட், தெலங்கானா அணிகள் மோதிய போட்டி 1–1 என ‘டிரா’ ஆனது. * பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான உ.பி., அணியில் இருந்து அமெரிக்க வேகப்பந்துவீச்சாளர் டாரா நோரிஸ் 28, மும்பை அணிக்கு (ரூ. 10 லட்சம்) ‘டிரேடு’ முறையில் ஒப்பந்தமானார்.