உள்ளூர் செய்திகள்

எக்ஸ்டிராஸ்

* இந்துாரில், உலக ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் நடக்கிறது. ‘ஜே’ பிரிவு லீக் போட்டியில் இந்தியாவின் சவுரவ் கோத்தாரி 4–0 என, ஹாங்காங்கின் சாவ் ஹான் மேனை வீழ்த்தினார். * கோவாவில் நடந்த இந்திய கால்பந்து லீக் தொடருக்கான போட்டியில், டெம்போ அணி 2–1 என்ற கோல் கணக்கில் ஷில்லாங் லஜோங் அணியை வென்றது. * பஞ்சாப்பில், தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்கள் (15 வயது) ஒற்றையர் பைனலில், மேற்கு வங்கத்தின் ரிஷான் 6–11, 9–11, 11–6, 11–4, 12–10 என, சகவீரர் ஹிமான் மாண்டலை வென்றார். பெண்கள் (15 வயது) ஒற்றையர் பைனலில், கர்நாடகாவின் தனிஷ்கா 11–5, 11–7, 11–8 என, மஹாராஷ்டிராவின் மைரா சங்கல்கரை தோற்கடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ