உள்ளூர் செய்திகள்

எக்ஸ்டிராஸ்

* ஹங்கேரியில், ‘டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப் டூர் பைலட்’ தொடர் நடக்கிறது. இதன் 21வது இடத்துக்கான முதல் போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் அபிமன்யு மிஷ்ராவை வீழ்த்தினார். மற்ற இந்திய நட்சத்திரங்களான வைஷாலி (23வது இடம்), அர்ஜுன் எரிகைசி (9வது இடம்) தங்களது முதல் போட்டியில் தோல்வியடைந்தனர். * இந்துாரில், உலக ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான ‘ரவுண்டு–16’ போட்டியில், இந்தியாவின் பங்கஜ் அத்வானி 4–1 என, சகவீரர் ராயான் ரஸ்மியை வீழ்த்தினார். காலிறுதியில் பங்கஜ் அத்வானி, சகவீரர் திக்விஜய் கடியானை சந்திக்கிறார். * பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான டில்லி அணியின் இயக்குநராக, இலங்கை ஜாம்பவான் மகிளா ஜெயவர்தனே நியமிக்கப்பட்டுள்ளார். * சிக்கிம்மில், ஜூனியர் தேசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில், கர்நாடகாவின் லக்சயா ராஜேஷ் 15–10, 15–7 என, ராஜஸ்தானின் பருல் சவுத்ரியை வீழ்த்தினார். பைனலில் லக்சயா, சகவீராங்கனை ஷைனாவை எதிர்கொள்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை