மேலும் செய்திகள்
புரோ லீக் ஹாக்கி: இந்தியா வெற்றி
15-Feb-2025
புவனேஸ்வர்: புரோ லீக் ஹாக்கியில் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி 0-4 என ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது.சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான புரோ லீக் 6வது சீசன் (2024---25) நடக்கிறது. மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, ஜெர்மனி அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து போராடிய இந்திய வீராங்கனைகளால், ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. மறுமுனையில் ஜெர்மனி அணிக்கு அமேலி (3வது நிமிடம்), சோபியா (18, 47வது), ஜோஹன்னா (59வது) கோல் அடித்து கைகொடுத்தனர்.ஆட்டநேர முடிவில் இந்திய அணி 0-4 என்ற கணக்கில் வீழ்ந்தது. இந்திய அணி இதுவரை விளையாடிய 5 போட்டியில், ஒரு வெற்றி, ஒரு 'டிரா', 3 தோல்வி என 4 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது.
புவனேஸ்வரில் நடந்த ஆண்களுக்கான புரோ லீக் போட்டியில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு மன்தீப் சிங் (22வது நிமிடம்), ஜர்மன்பிரீத் சிங் (45வது), சுக்ஜீத் சிங் (58வது) கைகொடுத்தனர். அயர்லாந்து அணிக்கு ஜெர்மி டங்கன் (8வது நிமிடம்) ஆறுதல் தந்தார். இந்திய அணி, 5 போட்டியில், 3 வெற்றி, 2 தோல்வி என 9 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறியது.
15-Feb-2025