மேலும் செய்திகள்
உலக விளையாட்டு செய்திகள்
18-Aug-2025
மும்பை: குளோபல் செஸ் லீக் கன்டென்டர்ஸ் தொடர் முதன்முறையாக நடக்கவுள்ளது.சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில், 2023ல் 'குளோபல் செஸ் லீக்' (ஜி.சி.எல்.,) முதல் சீசன் துபாயில் நடந்தது. கடந்த ஆண்டு லண்டனில் 2வது சீசன் நடந்தது.இந்நிலையில் வரும் டிச. 13ல், ஜி.சி.எல்., 3வது சீசன் துவங்கவுள்ளது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. இதில் உலகெங்கிலும் உள்ள திறமையான வீரர், வீராங்கனைகள் பங்கேற்பதற்காகவும், செஸ் போட்டியை பிரபலப்படுத்துவதற்காகவும், ஜி.சி.எல்.,, கன்டென்டர்ஸ் தொடர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு நடக்கிறது. இதில் வெற்றி பெறும் மூன்று பேர், ஜி.சி.எல்., 3வது சீசனில் பங்கேற்பர்.
18-Aug-2025