உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உலக சாம்பியனை வென்றார் குகேஷ்

உலக சாம்பியனை வென்றார் குகேஷ்

ஹம்பர்க்: 'பிரீஸ்டைல்' செஸ் தொடரின் ஒரே நாளில் இரு உலக சாம்பியன்களை வீழ்த்தினார் இந்தியாவின் குகேஷ்.ஜெர்மனியில் 'பிரீஸ்டைல் செஸ் சாலஞ்ச்' தொடர் நடக்கிறது. ஐந்து முறை உலக சாம்பியன் கார்ல்சன் (நார்வே), டிங் லிரென் (சீனா), இந்தியாவின் இளம் வீரர் குகேஷ் உட்பட 8 பேர் மோதுகின்றனர். முதலில் 'ரவுண்டு ராபின்' முறையில் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் மோதினர்.இதன் முதல் சுற்றில் பிரான்சின் அலிரேஜாவிடம் தோற்றார் குகேஷ். இரண்டாவது சுற்றில் உலகின் 'நம்பர்-1' வீரர் கார்ல்சனை சந்தித்தார். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், துவக்கத்தில் இருந்தே துல்லியமாக நகர்த்தி, நெருக்கடி தந்தார். முடிவில் 60 வது நகர்த்தலில் குகேஷ், கார்ல்சனை வீழ்த்தினார்.மூன்றாவது சுற்றில் அமெரிக்காவின் ஆரோனியனை வென்றார். அடுத்து நடப்பு உலக சாம்பியன், டிங் லிரெனுடன் (சீனா) மோதினார். இதில் 42வது நகர்த்தலில் வெற்றி பெற்று, ஒரே நாளில் இரண்டு உலக சாம்பியன்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதுவரை முடிந்த 5 சுற்றில் குகேஷ் 3.0 புள்ளியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை