உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / இந்தியா-ஜெர்மனி பலப்பரீட்சை * டில்லி ஹாக்கி தொடரில்...

இந்தியா-ஜெர்மனி பலப்பரீட்சை * டில்லி ஹாக்கி தொடரில்...

புதுடில்லி: டில்லியில் நடக்கும் ஹாக்கி போட்டியில் இன்று இந்தியா, ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தியா வந்துள்ள ஜெர்மனி ஹாக்கி அணி, இரு போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று டில்லியில் நடக்கிறது. கடைசியாக இரு அணிகள் பாரிஸ் ஒலிம்பிக் அரையிறுதியில் மோதின. இதில் இந்திய அணி கடைசி நேரத்தில் 2-3 என தோற்றது. பின் ஸ்பெயினை வென்று இந்தியா வெண்கலம் கைப்பற்றியது. பைனலில் நெதர்லாந்திடம் வீழ்ந்த ஜெர்மனி, வெள்ளி வென்றது. தற்போது உலகத் தரவரிசையில் ஜெர்மனி 'நம்பர்-2' ஆக உள்ளது. இந்தியா அணி 5வது இடத்திலுள்ளது. இருப்பினும் இரு அணிகள் மோதிய கடைசி 5 போட்டியில் இந்தியா 3ல் வெற்றி (ஜெர்மனி 2) வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்திய அணி இன்று தொடரை வெற்றியுடன் துவக்கலாம். ஹர்மன்பிரீத் சிங் தலைமையான அணியில் லாஸ் ஏஞ்சல்ஸ் (2028) ஒலிம்பிக்கிற்கு தயாராகும் வகையில் இளம் வீரர்களுக்கும் இடம் தரப்பட்டுள்ளது. துணைக்கேப்டனாக விவேக் சாகர் பிரசாத், வருண் குமாருடன், புதுமுகங்கள் ராஜிந்தர் சிங், ஆதித்யா அர்ஜுன் இடம் பெற உள்ளனர். 10 ஆண்டுக்குப் பின்...டில்லி, மேஜர் தயான் சந்த் தேசிய மைதானம், ஹாக்கியின் புனித தலமாக போற்றப்படும். கடைசியாக 2014ல் உலக லீக் பைனல் நடந்தது. தற்போது 10 ஆண்டுக்குப் பின் இங்கு, சர்வதேச போட்டி நடக்கிறது. மொத்தம் 16,000 பேர் போட்டியை நேரில் கண்டு ரசிக்கலாம். நேற்று வரை 12,000 பேர் இலவசமாக காண முன்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை