உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / பெல்ஜியம், ஸ்பெயின் கோல் மழை * மதுரையில் களைகட்டிய ஜூனியர் உலக ஹாக்கி

பெல்ஜியம், ஸ்பெயின் கோல் மழை * மதுரையில் களைகட்டிய ஜூனியர் உலக ஹாக்கி

மதுரை: ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற மதுரை மண்ணில், முதல் முறையாக சர்வதேச தரத்திலான ஹாக்கி தொடர் அரங்கேறியது. நேற்று துவங்கிய ஜூனியர் உலக கோப்பை ஹாக்கியில் கோல் மழை பொழிந்த பெல்ஜியம், ஸ்பெயின் அணிகள் வெற்றியை பதிவு செய்தன.மதுரை, ரேஸ்கோர்ஸ் மைதானத்தில், ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி நேற்று துவங்கியது. முதல் போட்டியில் ('ஏ' பிரிவு') உலகின் 'நம்பர்-1' இடத்திலுள்ள, நடப்பு சாம்பியன் ஜெர்மனி, தென் ஆப்ரிக்க அணியை எதிர்கொண்டது. ஜெர்மனி வெற்றிஏழு முறை உலக சாம்பியன் ஆன ஜெர்மனி அணிக்கு ஜஸ்டஸ் வார்வெக், 19, 56 வது நிமிடங்களில் 'பீல்டு' கோல் அடித்தார். 43, 44 வது நிமிடத்தில் கிடைத்த அடுத்தடுத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் ஹஸ்பாச், கேப்டன் பால் கிலாண்டெர் கோல் அடிக்க, ஜெர்மனி 4-0 என வெற்றி பெற்றது. பெல்ஜியம் கலக்கல்'டி' பிரிவில் பெல்ஜியம், நமீபியா அணிகள் மோதின. பெல்ஜியம் வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். லாவர்ஸ் (11, 24, 41, 42) நான்கு கோல் அடிக்க, லபோசெரே (18, 22, 58) மூன்று கோல் அடித்தார். பல்தாஜர் (36, 58) தன் பங்கிற்கு 2 கோல் அடித்தார். நமீபிய தரப்பில் பிரிட்ஸ் (55) ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். முடிவில் பெல்ஜியம் அணி 12-1 என்ற கோல் கணக்கில் வென்றது.ஸ்பெயின் 'எட்டு''டி' பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் ஸ்பெயின், எகிப்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஸ்பெயின் அணிக்கு அவிலா (5, 24, 32) 'ஹாட்ரிக்' கோல் அடித்தார். மார்டினும் (27, 46) கைகொடுத்தார். முடிவில் 8-0 என ஸ்பெயின் வெற்றி பெற்றது. அயர்லாந்து 'திரில்''ஏ' பிரிவில் கனடா, அயர்லாந்து மோதின. 13வது நிமிடம் அயர்லாந்தின் ஓ'கொனெல், முதல் கோல் அடித்தார். மறுபக்கம் கனடாவின் புல்லார் (26) கோல் அடிக்க, ஸ்கோர் 1-1 என ஆனது. இதன் சுதாரித்த அயர்லாந்து அணிக்கு ஓ'கொனெல் (33), வில்லியம்ஸ் (35), தாம்ப்சன் (41) கைகொடுக்க, 4-1 என முந்தியது. கடைசி நேரத்தில் கனடாவின் டிசவுசா (48, 53) 2 கோல் அடித்த போதும், வெற்றிக்கு போதவில்லை. அயர்லாந்து 4-3 என வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை