மேலும் செய்திகள்
பெண்கள் ஹாக்கி: சூர்மா சூப்பர்
15-Jan-2025
ராஞ்சி: பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் ஒடிசா அணி 3-2 என 'திரில்' வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட்டில் பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் முதல் சீசன் நடக்கிறது. 4 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று நடந்த லீக் போட்டியில் ஒடிசா வாரியர்ஸ், பெங்கால் டைகர்ஸ் அணிகள் மோதின. போட்டி துவங்கிய 8வது நிமிடத்தில் ஒடிசா அணியின் பல்ஜீத் கவுர், முதல் கோல் அடித்தார். போட்டியின் 16 வது நிமிடத்தில் பெங்கால் வீராங்கனை பியூட்டி, தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். போட்டி 1-1 என சமனில் முடிந்தது. வெற்றியாளரை முடிவு செய்ய 'பெனால்டி ஷூட் அவுட்' நடந்தது. இதில் இரு அணிக்கும் தலா 5 வாய்ப்பு தரப்பட்டன. பெங்கால் தரப்பில் பியோனா, கிரேஸ் தலா ஒரு கோல் அடித்தனர். ஒடிசா சார்பில் பிரீகே, சோனிகா, கெய்ட்லின் கோல் அடித்தனர். முடிவில் ஒடிசா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
15-Jan-2025