உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / சென்னையில் மாஸ்டர்ஸ் ஹாக்கி

சென்னையில் மாஸ்டர்ஸ் ஹாக்கி

புதுடில்லி: 'சீனியர்' வீரர்கள் பங்கேற்கும் 'மாஸ்டர்ஸ்' கோப்பை ஹாக்கி தொடர் சென்னையில் நடக்க உள்ளது.ஹாக்கி இந்தியா சார்பில் புதிய முயற்சியாக ஆண்கள், பெண்களுக்கான 'மாஸ்டர்ஸ்' கோப்பை தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 40 வயதுக்கு மேற்பட்ட வீரர்கள், 35 வயதுக்கு மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். போட்டிகள் பங்கேற்கும் அணிகளுக்கு ஏற்ப, லீக், 'நாக் அவுட்' முறையில் நடத்தப்படும். அணிகளின் விபரம் விரைவில் அறிவிக்கப்படும். பெண்கள் அணி முன்னாள் கேப்டன் அசுந்தா லக்ரா கூறுகையில்,'' முதன் முறையாக 'சீனியர்களுக்கான' தொடர் நடத்தப்பட உள்ளது மகிழ்ச்சி தருகிறது. என்னுடன் விளையாடிய சக நட்சத்திரங்களுடன் மீண்டும் களம் காண உள்ளது, உண்மையில் ஸ்பெஷலானது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை