உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / மலேசியாவை வென்றது இந்தியா: ஆசிய கோப்பை ஹாக்கியில்

மலேசியாவை வென்றது இந்தியா: ஆசிய கோப்பை ஹாக்கியில்

மஸ்கட்: ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் அசத்திய இந்திய பெண்கள் அணி 5-0 என மலேசியாவை வீழ்த்தியது.ஓமனில், பெண்களுக்கான ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி 9வது சீசன் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' இந்தியா, சீனா, ஜப்பான், இலங்கை உட்பட மொத்தம் 10 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் வங்கதேசத்தை (13-1) வீழ்த்தியது. நேற்று நடந்த 2வது லீக் போட்டியில் இந்திய அணி, மலேசியாவை எதிர்கொண்டது. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட இந்திய அணிக்கு வைஷ்ணவி (32வது நிமிடம்), தீபிகா (37, 39, 48வது), கனிகா (38வது) கோல் அடித்து கைகொடுத்தனர். கடைசி நிமிடம் வரை போராடிய மலேசிய வீராங்கனைகளால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ