உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / இந்தியா-நியூசிலாந்து டிரா: ஜோகர் கோப்பை ஹாக்கியில்

இந்தியா-நியூசிலாந்து டிரா: ஜோகர் கோப்பை ஹாக்கியில்

ஜோகர்: இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதிய ஜோகர் கோப்பை ஹாக்கி லீக் போட்டி 3-3 என 'டிரா' ஆனது.மலேசியாவில், 21 வயதுக்குட்பட்டோருக்கான 'சுல்தான் ஆப் ஜோகர்' கோப்பை ஹாக்கி 12வது சீசன் நடக்கிறது. முதல் மூன்று போட்டியில் ஜப்பான், பிரிட்டன், மலேசியாவை வீழ்த்திய இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. கடைசி லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின.ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் இந்தியாவின் குர்ஜோத் சிங் ஒரு 'பீல்டு' கோல் அடித்தார். இதற்கு, 17வது நிமிடத்தில் நியூசிலாந்தின் ஜான்டி எல்ம்ஸ் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். அடுத்த சில வினாடிகளில் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் ரோகித் ஒரு கோல் அடிக்க, முதல் பாதி முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது.பின் எழுச்சி கண்ட நியூசிலாந்து அணிக்கு ஜான்டி எல்ம்ஸ், 2 கோல் அடித்து (32, 45வது நிமிடம்) கைகொடுத்தார். கடைசி நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் தலேம் பிரியோபர்தா ஒரு கோல் அடித்தார். ஆட்டநேர முடிவில் போட்டி 3-3 என்ற கணக்கில் 'டிரா' ஆனது.நழுவிய வாய்ப்பு: லீக் சுற்றின் முடிவில் ஆஸ்திரேலியா, பிரிட்டன், இந்தியா தலா 10 புள்ளிகளுடன் இருந்தன. கோல் வித்தியாச அடிப்படையில் ஆஸ்திரேலியா (+12), பிரிட்டன் (+3) அணிகள் முதலிரண்டு இடத்தை கைப்பற்றி பைனலுக்குள் (அக். 26) நுழைந்தன. மூன்றாவது இடம் பிடித்த இந்தியா (+2), பைனல் வாய்ப்பை இழந்தது. இன்று நடக்கும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மீண்டும் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை