உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / இந்திய ஜோடி கலக்கல்: சையது மோடி பாட்மின்டனில்

இந்திய ஜோடி கலக்கல்: சையது மோடி பாட்மின்டனில்

லக்னோ: சையது மோடி பாட்மின்டன் ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஹரிஹரன், அர்ஜுன் ஜோடி வெற்றி பெற்றது. உ.பி.,யின் லக்னோவில், ‘சூப்பர் 300’ அந்தஸ்து பெற்ற சையது மோடி இந்தியா சர்வதேச பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் ஹரிஹரன் அம்சகருணன், அர்ஜுன் ஜோடி, மற்றொரு இந்திய ஜோடி அபினாஷ், ஆயுசை எதிர்கொண்டது. முதல் செட்டை ஹரிஹரன், அர்ஜுன் ஜோடி 21–13 என எளிதாக வென்றது. அடுத்த செட்டை 21–23 என போராடி நழுவவிட்டது. மூன்றாவது, கடைசி செட்டில் 21–9 என வசப்படுத்தியது. முடிவில் ஹரிஹரன், அர்ஜுன் ஜோடி 21–13, 21–23, 21–9 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் சாய் பிரதீக், ரெத்தினசபாபதி ஜோடி 17–21, 22–20, 21–19 என இங்கிலாந்தின் ஜாச் ரஸ், அலெக்ஸ் கிரீன் ஜோடியை வென்றது. பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் பிரனவி, ஷ்ரேயா ஜோடி, அமோலிகா, சம்ரித்தி ஜோடி வெற்றி பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ