மேலும் செய்திகள்
ரோகித், கோலி இல்லாமல்: என்ன சொல்கிறார் கவாஸ்கர்
17-Mar-2025
புதுடில்லி: ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய பெண்கள் அணி கேப்டனாக சலிமா நியமிக்கப்பட்டார்.ஆஸ்திரேலியா செல்லவுள்ள இந்திய பெண்கள் ஹாக்கி அணி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் (ஏப். 26, 27) ஆஸ்திரேலியா 'ஏ' அணியை சந்திக்கும் இந்திய அணி, கடைசி மூன்று போட்டியில் (மே 1, 3, 4) சீனியர் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. அனைத்து போட்டிகளும் பெர்த் ஹாக்கி மைதானத்தில் நடக்க உள்ளன.இத்தொடருக்கான 26 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக சலிமா, துணை கேப்டனாக நவ்னீத் கவுர் நியமிக்கப்பட்டனர். கோல்கீப்பராக சவிதா, பிச்சு தேவி தேர்வாகினர். ஜோதி சிங், சுஜாதா குஜூர், அஜ்மினா குஜூர், பூஜா யாதவ், மஹிமா டென் என, ஐந்து புதுமுக வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.இந்திய அணி: சலிமா (கேப்டன்), நவ்னீத் கவுர் (துணை கேப்டன்), சவிதா, பிச்சு தேவி (கோல்கீப்பர்), ஜோதி சிங், இஷிகா சவுத்ரி, சுஷிலா சானு, சுஜாதா குஜூர், சுமன் தேவி, ஜோதி, அஜ்மினா குஜூர், சாக் ஷி ராணா, வைஷ்ணவி, நேஹா, ஷர்மிளா தேவி, மணிஷா சவுகான், சுனேலிதா, மஹிமா டெட், பூஜா யாதவ், லால்ரெம்சியாமி, தீபிகா, ருதஜா, மும்தாஜ் கான், பல்ஜீத் கவுர், தீபிகா சோரெங், பியூட்டி டங்டங்.
17-Mar-2025