உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / லிதுவேனியன் வீரர் உலக சாதனை: வட்டு எறிதலில்...

லிதுவேனியன் வீரர் உலக சாதனை: வட்டு எறிதலில்...

ரமோனா: வட்டு எறிதலில் லிதுவேனியா வீரர் அலெக்னா, இரண்டு முறை உலக சாதனை படைத்தார்.அமெரிக்காவில், சர்வதேச எறிதல் போட்டி நடந்தது. இதில் ஆண்களுக்கான வட்டு எறிதலில், லிதுவேனியாவின் மைக்கோலஸ் அலெக்னா 22, பங்கேற்றார். முதல் வாய்ப்பில் 74.89 மீ., எறிந்த இவர், தனது சொந்த உலக சாதனையை முறியடித்தார். கடந்த ஆண்டு இங்கு நடந்த போட்டியில் இவர், 74.35 மீ., எறிந்து, 38 ஆண்டு கால உலக சாதனையை தகர்த்தார்.நான்காவது வாய்ப்பில் அதிகபட்சமாக 75.56 மீ., எறிந்த அலெக்னா, மீண்டும் தனது சொந்த சாதனையை முறியடித்து, புதிய உலக சாதனை நிகழ்த்தினார். பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற அலெக்னா, உலக சாம்பியன்ஷிப் (ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்), ஐரோப்பிய சாம்பியன்ஷிப் (ஒரு தங்கம், ஒரு வெண்கலம்) போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார். தவிர இவர், 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன் (2021) பட்டம் வென்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை