மேலும் செய்திகள்
தேசிய விளையாட்டு: ஜோதி 'ஹாட்ரிக்' தங்கம்
09-Feb-2025
அரிசோனா: உள்ளரங்கு தடகளத்தின் 60 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் மாதவேந்திரா ஷெகாவத் தங்கம் வென்றார்.அமெரிக்காவில், உள்ளரங்கு தடகள போட்டி நடந்தது. ஆண்களுக்கான 60 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் மாதவேந்திரா ஷெகாவத் பங்கேற்றார். தகுதிச் சுற்றில் இலக்கை 7.79 வினாடியில் அடைந்த மாதவேந்திரா, முதலிடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். அடுத்து நடந்த பைனலில் அசத்திய இவர், பந்தய துாரத்தை 7.64 வினாடியில் கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். கடந்த ஆண்டு பிரான்சில் நடந்த போட்டியில் இந்தியாவின் தேஜாஸ் ஷிர்ஸ் (7.64 வினாடி) படைத்த தேசிய சாதனையை சமன் செய்த மாதவேந்திரா, தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்தார். கடந்த பிப். 14ல் அமெரிக்காவில் நடந்த போட்டியில் இலக்கை 7.68 வினாடியில் கடந்தது மாதவேந்திராவின் சிறந்த செயல்பாடாக இருந்தது.
அமெரிக்காவில் நடந்த மற்றொரு உள்ளரங்கு தடகள போட்டிக்கான குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை கிருஷ்ணா ஜெயசங்கர் 22, பங்கேற்றார். இவர், முன்னாள் இந்திய கூடைப்பந்து நட்சத்திரங்களான ஜெயசங்கர் மேனன், பிரசன்ன குமாரியின் மகள். அமெரிக்க பல்கலை.,யில் பயின்று வரும் இவர், அதிகபட்சமாக 16.03 மீ., எறிந்து வெண்கலம் வென்றார். தவிர இவர், உள்ளரங்கு குண்டு எறிதலில் புதிய தேசிய சாதனை படைத்தார். இதற்கு முன், 2023ல் மகாராஷ்டிராவின் பூர்ணராவ் ரானே, 15.54 மீ., எறிந்தது சாதனையாக இருந்தது.
09-Feb-2025