தேசிய மாஸ்டர்ஸ் தடகளம்: தமிழக அணிக்கு வெள்ளி
பெங்களூரு: தேசிய மாஸ்டர்ஸ் தடகளத்தின் 4x400 மீ., தொடர் ஓட்டத்தில் தமிழக அணியினர் வெள்ளி வென்றனர்.தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் தொடரின் 45 வது சீசன் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் நேதாஜி சுபாஷ் மைதானத்தில் நடக்கிறது. இதில் சிறப்பாக செயல்படுபவர்கள், இந்தோனேஷியாவில் நடக்கவுள்ள ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டிக்கு தகுதி பெறுவர். கடந்த சில ஆண்டுகளாக தமிழக அணியினர் அசத்துகின்றனர்.இதில் 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான 4x400 மீ., தொடர் ஓட்டம் நடந்தது. இதில் பாலசுப்ரமணியன் (தினமலர்), ரகுநாத் (இன்ஸ்பெக்டர், செக்யூரிட்டி பிராஞ்ச், சி.ஐ.டி., தலைமையகம், சென்னை) கணேசன் (தெற்கு ரயில்வே, இன்ஜினியரிங் பிரிவு, திண்டுக்கல்), ஜெய சந்திர பாண்டி (தலைமை கான்ஸ்டபிள், சட்டம் ஒழுங்கு, செல்லுார் போலீஸ் ஸ்டேஷன், மதுரை) இடம் பெற்ற தமிழக அணியினர் இரண்டாவது இடம் பிடித்து, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினர்.