மேலும் செய்திகள்
உலக தடகளம்: குல்வீர் தகுதி
22-Feb-2025
ஆக்லாந்து: நியூசிலாந்தின் சாம் ரூத், ஒரு மைல் துாரத்தை 4 நிமிடங்களுக்கு குறைவாக ஓடிய இளம் வீரர் என்ற சாதனை படைத்தார்.நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில், உள்ளூர் தடகள போட்டி நடந்தது. ஆண்களுக்கான ஒரு மைல் துாரம் (1.6 கி.மீ.,) கொண்ட ஓட்டப்பந்தயம் நடந்தது. இதன் பைனலில் நியூசிலாந்தின் சாம் ரூத், இலக்கை 3 நிமிடம், 58.35 வினாடியில் கடந்து 2வது இடம் பிடித்தார். ஒரு மைல் துாரத்தை 4 நிமிடங்களுக்கு குறைவாக கடந்த இளம் வீரர் (15 வயது) என்ற சாதனை படைத்தார் ரூத். இதற்கு முன், 2017ல் இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியன் நார்வேயின் ஜாக்கோப் இங்பிரிட்சன் (3 நிமிடம், 58.07 வினாடி), தனது 16வது வயது, 250 நாளில் இச்சாதனை படைத்திருந்தார்.தவிர ரூத், ஒரு மைல் ஓட்டத்தில் தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்தார். இதற்கு முன், கடந்த ஜனவரி மாதம் ஒரு மைல் துாரத்தை 4 நிமிடம், 01.72 வினாடியில் கடந்தது இவரது சிறந்த செயல்பாடாக இருந்தது.இப்போட்டியில் முதலிடத்தை நியூசிலாந்தின் சாமுவேல் டானர் (3 நிமிடம், 58.29 வினாடி), 3வது இடத்தை நியூசிலாந்தின் பெஞ்சமின் வால் (3 நிமிடம், 59.00 வினாடி) கைப்பற்றினர்.
22-Feb-2025