மேலும் செய்திகள்
நார்வே செஸ்: அர்ஜுன் வெற்றி
28-May-2025
ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் போட்டியில் உலக சாம்பியன் குகேஷிடம் வீழ்ந்தார் கார்ல்சன்.நார்வேயில், சர்வதேச செஸ் ('கிளாசிக்') தொடர் நடக்கிறது. ஆறாவது சுற்றில் நடப்பு உலக சாம்பியன் இந்தியாவின் குகேஷ் 19, (நம்பர்-5), ஐந்து முறை உலக சாம்பியன் ஆன உலகின் 'நம்பர்-1' வீரர், நார்வேயின் கார்ல்சனை 34, எதிர்கொண்டார். போட்டியின் 52 வது நகர்த்தலில் கார்ல்சன் தவறு செய்ய, போட்டி குகேஷ் பக்கம் திரும்பியது. நான்கு மணி நேரம் நடந்த இப்போட்டியில், குகேஷின் 62வது நகர்த்தலை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் கார்ல்சன். கார்ல்சன் 'ஷாக்'போட்டியில் தனது தோல்வி உறுதியானது எனத் தெரிந்ததும், ஆக்ரோஷமாக 'டேபிளில்' ஓங்கி குத்தினார். பின் சுதாரித்த கார்ல்சன், குகேஷிடம் கைகொடுத்து விட்டு, வெளியேறினார். நீண்ட நேரம் விளையாடப்படும் 'கிளாசிக்' முறையிலான செஸ் போட்டியில் குகேஷ், முதன் முறையாக கார்ல்சனை வீழ்த்தினார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் அர்ஜுன், 'டை பிரேக்கரில்' சீன வீரர் வெய் இயை வென்றார். ஆறு சுற்று முடிவில் கார்ல்சன் (9.5), அமெரிக்காவின் காருணா (9.5), குகேஷ் (8.5) முதல் மூன்று இடங்களில் உள்ளனர். அர்ஜுன் (7.5) 5வது இடத்தில் உள்ளார்.பெண்கள் பிரிவு ஆறாவது சுற்றில் இந்தியாவின் வைஷாலி, 'டை பிரேக்கரில்' சக வீராங்கனை ஹம்பியை வென்றார். உக்ரைனின் அனா முஜிசக் (9.5), இந்தியாவின் ஹம்பி (9.5) முதல் இரு இடத்தில் உள்ளனர். வைஷாலி (8.0) 4வது இடத்தில் உள்ளார்.'பிடே' பதிலடிநார்வே செஸ் தொடரில் ஒவ்வொரு வீரரும் இரு முறை மோதுவர். மே 26ல் நடந்த கார்ல்சனுக்கு எதிரான முதல் போட்டியில் குகேஷ் தோல்வியடைந்தார். அப்போது கார்ல்சன் கூறுகையில்,'' நீங்கள் ராஜாவுடன் மோதும் போது, எவ்வித வாய்ப்பையும் தவறவிடக் கூடாது,'' என்றார். தற்போது குகேஷிடம் கார்ல்சன் தோற்றார். இந்நிலையில் கார்ல்சனுக்கு பதிலடி தரும் வகையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (பிடே) வெளியிட்ட செய்தியில்,' நீங்கள் ராஜாவுடன் (உலக சாம்பியன்) மோதும் போது, உங்களது சிறந்த ஆட்டத்தை தவற விடக் கூடாது,' என தெரிவித்துள்ளது.
28-May-2025