பாராலிம்பிக் மாரத்தான்: மொராக்கோ வீராங்கனை உலக சாதனை
பார்வையற்ற பெண்களுக்கான மாரத்தான் (டி12) பைனலில் அசத்திய மொராக்கோவின் பாத்திமா எல் இட்ரிஸ்சி, இலக்கை 2 மணி நேரம், 48 நிமிடம், 36 வினாடியில் அடைந்து உலக சாதனையுடன் தங்கம் வென்றார். இதற்கு முன் 2020ல் ஜப்பானின் மிசாடோ மிச்சிஷிடா (2 நிமிடம், 54 நிமிடம், 13 வினாடி) சாதனை படைத்திருந்தார்.ஈரானுக்கு கடைசி தங்கம்பாரிஸ் பாராலிம்பிக்கில் கடைசி தங்கப்பதக்கம் ஈரானுக்கு கிடைத்தது. ஆண்களுக்கான 'பவர்லிப்டிங்' 107 கிலோ பைனலில், அதிகபட்சமாக 263 கிலோ துாக்கிய ஈரானின் அகமது அமின்சாதே தங்கம் வென்றார். வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை முறையே உக்ரைனின் ஆன்டன் கிருகோவ் (251 கிலோ), ஜார்ஜியாவின் அகாகி ஜின்ட்கார்ட்சே (250 கிலோ) கைப்பற்றினர்.தடகளம்: திலீப் ஏமாற்றம்ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் (டி47) பைனலில் இந்தியாவின் திலீப் காவிட் மஹது பங்கேற்றார். இலக்கை 49.99 வினாடியில் அடைந்த இவர், 8வது இடம் பிடித்து ஏமாற்றினார். மொராக்கோவின் எல் ஹடாவ் அய்மன் (46.65 வினாடி) உலக சாதனையுடன் தங்கம் வென்றார்.படகு போட்டி: பூஜா 4வது இடம்பெண்களுக்கான படகு போட்டி (கேஎல்1) 'கயாக்' தனிநபர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பூஜா ஓஜா பங்கேற்றார். இலக்கை ஒரு நிமிடம், 17.23 வினாடியில் அடைந்த இவர் 4வது இடம் பிடித்து பைனல் வாய்ப்பை இழந்தார்.கால்பந்து: பிரான்ஸ் 'தங்கம்'ஆண்களுக்கான பார்வையற்றோர் கால்பந்து பைனலில் பிரான்ஸ், அர்ஜென்டினா அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என சமநிலை வகித்தது. பின் 'பெனால்டி ஷூட் அவுட்'டில் அசத்திய பிரான்ஸ் அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. அர்ஜென்டினாவுக்கு வெள்ளி கிடைத்தது. கொலம்பியாவை வீழ்த்திய பிரேசில் அணி வெண்கலம் கைப்பற்றியது.கூடைப்பந்து: அமெரிக்கா அபாரம்ஆண்களுக்கான 'வீல்சேர்' கூடைப்பந்து பைனலில் பிரிட்டன், அமெரிக்கா அணிகள் மோதின. இதில் அமெரிக்க அணி 73-69 (23-18, 15-13, 15-12, 20-26) என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றது. பிரிட்டனுக்கு வெள்ளி கிடைத்தது. கனடாவை வீழ்த்திய ஜெர்மனி, வெண்கலம் கைப்பற்றியது.* பெண்களுக்கான 'வீல்சேர்' கூடைப்பந்து பைனலில் நெதர்லாந்து, அமெரிக்கா அணிகள் மோதின. இதில் நெதர்லாந்து அணி 63-49 (8-12, 23-12, 17-13, 15-12) என வெற்றி பெற்று தங்கத்தை தனதாக்கியது. அமெரிக்காவுக்கு வெள்ளி கிடைத்தது. கனடாவை வீழ்த்திய சீனா வெண்லகம் வென்றது.வாலிபால்: அமெரிக்கா அசத்தல்பெண்களுக்கான 'சிட்டிங்' வாலிபால் பைனலில் சீனா, அமெரிக்கா அணிகள் மோதின. இதில் அமெரிக்க அணி 3-1 (25-21, 23-25, 25-20, 25-22) என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தை தட்டிச் சென்றது. சீனாவுக்கு வெள்ளி கிடைத்தது. பிரேசிலை வீழ்த்திய கனடா, வெண்கலம் கைப்பற்றியது.