மேலும் செய்திகள்
கபடி: புனே 'ஹாட்ரிக்' வெற்றி
03-Sep-2025
விசாகப்பட்டனம்: புரோ கபடி லீக் போட்டியில் ஏமாற்றிய ஜெய்ப்பூர் அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது.விசாகப்பட்டனத்தில் நடந்த புரோ கபடி லீக் போட்டியில் ஜெய்ப்பூர், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 16-9 என முன்னிலையில் இருந்தது.இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட ஜெய்ப்பூர் அணி 23 புள்ளி பெற்றது. ஆட்டநேர முடிவில் தெலுங்கு டைட்டன்ஸ் 37-32 என்ற கணக்கில், 'நடப்பு சீசனில்' முதல் வெற்றியை பதிவு செய்தது. ஜெய்ப்பூர் அணிக்கு நிதின் குமார் (13) ஆறுதல் தந்தார். தெலுங்கு டைட்டன்ஸ் அணி சார்பில் கேப்டன் விஜய் மாலிக், 'ஆல்-ரவுண்டர்' பாரத் தலா 8 புள்ளி பெற்றனர்.
03-Sep-2025