உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஹாக்கி: இந்திய அணி ஏமாற்றம்

ஹாக்கி: இந்திய அணி ஏமாற்றம்

புவனேஸ்வர்: புரோ ஹாக்கி லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி, 3-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான புரோ லீக் 6வது சீசன் (2024-25) நடக்கிறது. மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, ஸ்பெயின் மோதின. 19வது நிமிடத்தில் இந்தியாவின் பல்ஜீத் கவுர், ஒரு பீல்டு கோல் அடித்தார். ஸ்பெயினின் சோபியா, எஸ்தெல், 21, 25 வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடிக்க, இந்தியா 1-2 என பின் தங்கியது. இப்போட்டியில் அறிமுகம் ஆன சாக் சி (38), சர்வதேச அரங்கில் முதல் கோல் அடித்தார். அடுத்து ருடாஜா (45) ஒரு பீல்டு கோல் அடிக்க, இந்திய அணி 3-2 என முன்னிலை பெற்றது. இதன் பின் இந்திய அணி வீராங்கனைகள் ஏமாற்றினர். வாய்ப்பை பயன்படுத்திய ஸ்பெயினின் எஸ்தெல் (49) மற்றொரு கோல் அடிக்க, ஸ்கோர் 3-3 என சமன் ஆனது. போட்டி முடிய 8 நிமிடம் இருந்த போது, ஸ்பெயின் கேப்டன் லுாசியா (52) தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.இதுவரை இந்திய அணி பங்கேற்ற 3 போட்டியில் 1 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளி மட்டும் பெற்று, பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. சீனா (8ல் 4 வெற்றி, 16 புள்ளி), நெதர்லாந்து (4ல் 3 வெற்றி, 9), ஆஸ்திரேலியா (4ல் 2 வெற்றி, 8) பட்டியலில் 'டாப்-3' இடத்தில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி