உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / தமிழ் தலைவாஸ் அணி வெற்றி * புரோ கபடியில் கலக்கல்

தமிழ் தலைவாஸ் அணி வெற்றி * புரோ கபடியில் கலக்கல்

சென்னை: புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 56-37 என பாட்னாவை வீழ்த்தியது. இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கிறது. நேற்று சென்னையில் நடந்த லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் துவக்கத்தில் 3-2 என முந்தியது தமிழ் தலைவாஸ். இதன் பின் வரிசையாக அவுட்டாக, 9 வது நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் அணி 'ஆல் அவுட்டானது'. 10-13 என பின்தங்கியது.பின் எழுச்சி பெற்ற தமிழ் தலைவாஸ் அணிக்கு அர்ஜுன் தேஜ்வல் அடுத்தடுத்து புள்ளியுடன் திரும்ப, பாட்னா அணியை இரு முறை ஆல் அவுட்டாக்கி பதிலடி தந்தது. முதல் பாதியில் 30-19 என முன்னிலை பெற்றது.தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் அர்ஜுன் சிறப்பாக செயல்பட்டார். முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 56-37 என்ற கணக்கில் சூப்பர் வெற்றி பெற்றது. 28 முறை 'ரெய்டு' சென்ற அர்ஜுன் போனஸ் புள்ளி 5 உட்பட, மொத்தம் 26 புள்ளி பெற்று அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ